குற்றவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி மற்றும் கிழக்கு லண்டன் பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற குற்றவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ;

Update: 2024-04-07 11:32 GMT

குற்றவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி மற்றும் கிழக்கு லண்டன் பல்கலைக் கழகம் சார்பில் குற்றவியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்து கருத்தரங்கு சிறப்பு மலரை வெளியிட்டார். அவர் பேசும் போது சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வரும் குற்றங்களை இன்றைய இளந்தலைமுறையினர் மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் எனக் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு காமராஜ் கல்லூரி துணை முதல்வர் அருணாச்சல ராஜன் தலைமை தாங்கினார்.முன்னதாக மாணவர் சிவராம சித்து வரவேற்றார். குற்றவியல் துறைத் தலைவர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News