லால்குடியில் சர்வதேச விதவைகள் தின விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் சர்வதேச விதவைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2024-06-25 00:34 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் நடைப்பெற்ற சர்வதேச விதவைகள் தின விழிப்புணர்வு பேரணியைஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் வெளிச்சம் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தினர். இப்பேரணியை புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அருட்சகோதரி ஜெரின் பிரான்சிஸ் லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், சிபிஎம் மாட்ட செயலாளர் ஜெயசீலன், லால்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் கென்னடி,, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி, வெளிச்சம் கூட்டமைப்பின் செயலாளர் பிரசில்லா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.