சாத்தூரில் அதிமுக சார்பில் உலக மகளிர் தினம்
சாத்தூரில் அதிமுக சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-08 04:11 GMT
உலக மகளிர் தினம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கேக் வெட்டி மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அதிமுக மகளிர் அணியினர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒருவருக்கொருவர் கேக் வழங்கி கொண்டாடினர் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர் அணியை சேர்ந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் அதிமுகவில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் ஆர்.கே இரவிச்சந்திரன் கவுரவபடுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.