அச்சரப்பாக்கத்தில் அகில உலக மகளிர் தின விழா !
அச்சரப்பாக்கத்தில் சி. ஆர். டி. எஸ் பெண்கள் கூட்டமைப்புகளில் அகில உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 12:19 GMT
அச்சரப்பாக்கத்தில் சி. ஆர். டி. எஸ் பெண்கள் கூட்டமைப்புகளில் அகில உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்க வழிகாட்டுதலின் கீழ், செங்கல்பட்டு வரும் பெண்கள் மேம்பாடு சங்கம் மற்றும் மதரம் அன்னை தெரேசா நலச்சங்கம் இணைந்து அச்சிறுப்பாக்கம் மழை மாதா அருள் திருத்தளத்தில் 'பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்வோம், பெண்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவோம்' என்ற தலைப்பில் அகில உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.