மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா !
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கலந்து கொண்டு பேசினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 06:27 GMT
மகளிர் தின விழா
மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில், உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் இரா.தங்கராஜ், கல்லூரி ஆராய்ச்சிப் புலத்தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.இலக்கியா, புதுக்கோட்டை டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் அனிதா தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக, வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் தா.வித்யா வரவேற்றார். நிறைவாக, ஆங்கிலத் துறைத்தலைவர் எம்.சிவசங்கரி நன்றி கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் வீ.வெற்றிவேல், கி.உஷா தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.