மகளிர் காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின மாநாடு 

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் வெள்ளமோடியில் நடந்த உலக மகளிர் தின மாநாட்டில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-05 03:32 GMT
குமரியில் நடந்த மகளிர் தின மாநாட்டில் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான நீதி- நாங்கள் தயார் என்ற தலைப்பில் உலக மகளிர் தின மாநாடு குமரி மாவட்டம் அம்மாண்டி விளை பகுதி  வெள்ளமோடியில் நேற்று மாலை நடந்தது. மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் வதன நிஷா, சர்மிளா ஏஞ்சல், சோனிமிதுனா முன்னிலை வகித்தனர்.     மாநாட்டில் விஜய் வசந்த் எம் பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ மற்றும் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ரூபி மனோகரன், சாண்டி உமன் உட்பட பலர் பேசினார்கள்.    

  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், -  40 ஆண்டுகள் போராடி பழமை வாதிகளை வென்று புதுமை புகுத்திய வரலாறு படைத்தது கன்னியாகுமரி மாவட்டம். மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராடுகிறார்கள்.   ராகுல் காந்தியால் தான் பெண்களுக்கு உரிமை பெற்றுத்தர முடியும். காங்கிரஸ் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்து பெரிய போராட்டத்தை முன் வைத்த கட்சி .  பெண்கள் பச்சை மையில் கையெழுத்திட வேண்டும் என பஞ்சாயத்து ராஜ் கொண்டு வந்து, பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி. என பேசினார்.

Tags:    

Similar News