உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம்
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.;
Update: 2024-03-10 15:36 GMT
எம்.பி.கனிமொழி
திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.பி.கனிமொழி, ''பிரதமர் மோடி கேஸ் விலையை உயர்த்தி அதன் மானியத்தை நிறுத்தி, தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ரூ.100 குறைத்திருப்பது மகளிரை கொச்சைபடுத்துவது போன்றாகும்" என்றார்