மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு நேர்முகத் தேர்வு
75 சதவீதத்திற்கு மேல் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு வரும் 16ம் தேதி நடக்கிறது.;
Update: 2024-02-13 05:15 GMT
ஆட்சியர் சாருஸ்ரீ
75 சதவீதத்திற்கு மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம் ,மாவட்ட ஆட்சியரக வளாகம் திருவாரூரில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது . இதுவரை தையல் இயந்திரம் பெறாத மாற்று திறனாளிகள் உரிய சான்றுகளான அசல் மற்றும் நகலுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.