மாற்றுதிறனாளிகளுக்கு இலவச கைப்பேசி வழங்க நேர்முக தேர்வு
திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கான இலவச கைப்பேசி வழங்க நடைபெற்ற நேர்முக தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
Update: 2023-12-30 07:13 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 முதல் 2024 ஆம் நிதி ஆண்டு 18 வயதிற்கு மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கான இலவச கைப்பேசி வழங்கும் திட்டத்திற்கான நேர்முக தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ என்று நேரில் சென்று பார்வையிட்டார். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.