முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
அதிமுக நகரச் செயலாளர் மீது பொய் வழக்கு என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.;
Update: 2024-05-01 10:59 GMT
அதிமுக நகரச் செயலாளர் மீது பொய் வழக்கு என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.
குமாரபாளையத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையை தட்டி கேட்ட அதிமுக நகரச் செயலாளர் மீது பொய் வழக்கு. குமாரபாளையம் பள்ளி பாளையம் பகுதியில் சந்து கடைகள் அதிகரித்து, கஞ்சா விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. குமாரபாளையம் நகர திமுக செயலாளர் நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன் தூண்டுதலின் பேரில் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் கள்ள மதுபானம் விற்றவரை மண்டையை உடைத்து விட்டதாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திருச்செங்கோட்டில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணி பேட்டி