அஞ்சலகம் மூலம் விபத்து காப்பீடு அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் விபத்து காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-10 04:13 GMT

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) மூலம், பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு 520, 555, 755 பீரீமியத் தில், 10 லட்சம், 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமு கப்படுத்தியுள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீடு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால் காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள்.) மூலம், மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீடு திட்டம் செயல்ப டுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ௧


8 முதல் 65வயது வரை உள்ளவர்கள், இந்த காப்பீடு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன் பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட் ரிக் சாதனம் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில்,முற் றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படு கிறது. இந்த திட்டத்தில் 10 லட்சம் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப் பீடு (விபத்தினால் ஏற்ப டும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம்). ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. தொலைபேசி மூலம் கணக் கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட் ட டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தை கள்) கல்விசெலவுகளுக்கு 1 லட்சம் வரை விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1000 வீதம் 15 நாட்களுக்கு (2 நாட்கள் கழிக்கப்படும்) வழங்கப்படும். விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய 5000 வரை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்கா ரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News