வேளாண்துறையில் மின்னணு பரிவர்த்தனை நடைமுறை அறிமுகம்

விவசாயிகள் விதைகள் உள்ளிட்ட பொருள்களை ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஐடி மூலமாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-22 10:44 GMT

கோப்பு படம் 

தமிழக வருவாய்துறை மற்றும் பத்திரப்பதிவு துறைகளில் மின்னணு பரிவர்த்தனை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வேளாண் துறையின் கீழ் செயல்படும் வட்டார விரிவாக்க மையக் கிடங்குகளில் இருந்து,

விநியோகம் செய்யப்படும் விதை, உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் எல்லா இடுபொருள்களையும் விவசாயிகள் தங்கள் ஏடிஎம் கார்டு மற்றும் யுபியை ஐடி மூலமாக எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் பெறலாம் என வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சோமு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News