சிறுகனூரில் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம்

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மற்றும் தோழமை கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-03-23 03:35 GMT

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மற்றும் தோழமை கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் திருச்சி சிறுகனூரில் பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் ,ரகுபதி ,கே .என் நேரு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா ,மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ ,பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக அருண் நேருவையும் அறிமுகப்படுத்தினர். தமிழக முதல்வர் பேசுகையில் :- பிரதமரிடம் நிதி ஏன் கொடுக்கவில்லை - தமிழகத்திற்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் .எதற்கும் சரியான பதில் இல்லை. 350 கோடி மதீப்பீட்டில் பேரூந்து முனையம் - 110 கோடியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் - புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் முதல் பெரம்பலூர் வரை அகல ரயில் பாதை உருவாக்கப்படும். திருச்சி பால்பன்னை சாலையில் உயர்மட்ட சாலை அமைப்பதோடு அனுகு சாலையும் அமைக்கப்படும் என பேசினார் .
Tags:    

Similar News