மாநாட்டில் பங்கேற்க முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு
கரூரில் தமிழர் தேசம் கட்சி சார்பில் நடக்கவுள்ள மாநாட்டில் பங்கேற்க, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-20 02:56 GMT
தமிழர் தேசம்- மாநாடு. முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு. தமிழர் தேசம் கட்சியின் சார்பாக நடைபெறும் "கரூர் பாராளுமன்ற தொகுதி மீட்பு" மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் நேற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். மாநாட்டு அழைப்பிதழை பெற்றுக் கொண்ட எம் ஆர் விஜயபாஸ்கர் மாநாடு சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.