அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-24 14:34 GMT

திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.


திருப்பூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர அழைப்பு திருப்பூர், மே. 24: திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு கடந்த 10-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி, 10&ம் வகுப்பு, 12&ம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான  இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

ஐடிஐ-யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 750 வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும்ப யிற்சியாளர்களுக்கு டுல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று இப்பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மூலம் பிரதி மாதம் ரூ.1000 கூடுதலாக பெற்று வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் www.skilltraining.gov.in என்ற இணைய வழியில் அல்லது திருப்பூர். தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள "சேர்க்கை உதவி மையத்தில்", நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421- 2429201, 04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News