அஞ்சலகங்களில் சூரியசக்தி இலவச மின்திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு

அஞ்சலகங்களில் சூரியசக்தி இலவச மின்திட்டத்தில் பதிவு செய்ய தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-03-06 07:42 GMT

அஞ்சலகங்களில் சூரியசக்தி இலவச மின்திட்டத்தில் பதிவு செய்ய தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் சார்பில் இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரியசக்தி இலவச மின் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு கிலோவாட் திறன் உள்ள சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க 60,000 மானியமாக வழங்கப் படுகிறது.

அதற்கு மேல் கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலைலையம் அமைத்தால் 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த மானிய தொகை மின் நிலையம் அமைத்து முடித்ததும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவர்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரர்கள் அல்லது அஞ்சலகங்களை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News