தமிழ்நாட்டுக்கு தப்பு தப்பாக கூறும் திருக்குறள் மட்டும்தானா?
தமிழ்நாட்டுக்கு தப்பு தப்பாக கூறும் திருக்குறள் மட்டும்தானா... எய்ம்ஸ் கிடையாதா? என பிரதமருக்கு சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தப்பு தப்பாக கூறும் திருக்குறள் மட்டும்தானா... எய்ம்ஸ் கிடையாதா? - பிரதமருக்கு சு. வெங்கடேசன் கேள்வி! பல மாநிலங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அடுத்தடுத்து பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை துவங்கப்படாதது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை துவங்கப்படாதது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை துவங்கப்படாதது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை துவங்கப்படாதது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 2019, ஜன.27ம் தேதி அன்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதனால், தென் தமிழக மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப் போவதாக மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து மக்களவையிலும், அரசியல் களத்திலும் தமிழக அரசியல் தலைவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இன்று வரையில் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, குஜராத் ராஜ்கோட், ஆந்திராவில் மங்களகிரி, பஞ்சாப்பில் பதிண்டா, மேற்கு வங்கத்தில் கல்யாணி போன்ற இடங்களிலும் எய்ம்ஸ் மருத்துவனையில் அடிக்கல் நாட்டப்பட்டு, அனைத்தும் மருத்துவமனைகளும் திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டன. இன்று ஜம்முவில் சம்பா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி திறந்து வைத்தார். பிப்ரவரி 25 அன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய இடங்களின் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி கூட இன்னும் துவங்கப்படாதது, தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில், 'மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில்,'அடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானே?' என்று புகைப்படங்களை பதிவிட்டு அவர் கேள்வி எழுப்பினார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழகம் வஞ்சிக்கப்படுவதாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.