புழல் ஏரியின் பராமரிப்பு இதுதானா? பார்வையிட வரும் மக்கள் அதிருப்தி.

புழல் ஏரி முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2023-12-15 09:07 GMT

புழல் ஏரி முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் பராமரிப்பு இப்படித்தான் உள்ளதா என, பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி, 'மிக்ஜாம்' புயல், மழை எதிரொலியால், வேகமாக நிரம்பிய நிலையில், 4ம் தேதி நள்ளிரவு முதல், வினாடிக்கு 7,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

ஆனாலும், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து கிடைத்த அதிகபட்ச நீர் வரத்தால், அங்குள்ள போலீஸ் கண்காணிப்பு அறை அருகே, ஏரிக்கரை சேதமடைந்தது. இது குறித்து, கடந்த 7ம் தேதி நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதன் பின், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவால், நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். ஆனால், கரையில் சேதமடைந்த இடத்தை ஆய்வு செய்யாமல், மதகு அருகே பார்வையிட்டு, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துவிட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News