உதகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்
உதகை மற்றும் குந்தா பகுதிகளில் வசிக்கும் 420 பேருக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-12 09:14 GMT
நீலகிரி மாவட்டம், உதகை இளைஞர் படுகர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் இணைந்து உதகை வட்டத்தில் 149 பயனாளிகளுக்கு ரூ.18.11 இலட்சம் மதிப்பிலும், குந்தா வட்டத்தில் 271 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பிலும் என மொத்தம் 420 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடி மதிப்பிலான பட்டாக்களை இன்று வழங்கினார்கள்.