மரக்காணத்தில் 45 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

மரக்காணத்தில் 45 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை சேர்மன் தயாளன் வழங்கினார்.

Update: 2024-03-11 11:40 GMT

ஆணைகளை வழங்கல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள பழங்குடியின மக்களின் கோரிக் கையை ஏற்று, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வருவாய் துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது. இவர்களில் பிரம்மதேசம், கீழ் அருங்குணம், கீழ் சிவிரி, கொளத்தூர், பெருமுக்கல், வடநெற்குணம், கீழ்எடையாளம், நகர் ஆகிய கிராமங் களில் வசிக்கும் 45 பழங்குடியினருக்கு பிரதம மந்திரி ஆதிவாசி நியாய அபியான் திட்டத்தின் கீழ் தலா ரூ 5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்குகான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தயாளன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மரக்காணம் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News