அண்ணாமலை சொல்வது நியாமில்லை : அமைச்சர்

எங்காவது ஒரு குற்ற சம்பவம் நிகழ்வை வைத்து அண்ணாமலை சட்ட ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது நியாயமில்லை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 14:54 GMT

அமைச்சர் முத்துசாமி

திமுக தலைவர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஊனமுற்றோர் நல பள்ளிக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , எங்காவது ஒரு குற்ற சம்பவம் நிகழ்வை வைத்து அண்ணாமலை சட்ட ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது சரியில்லை என்றார். 

   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாரையும் பட்டியில் அடைக்கவில்லை என்ற அமைச்சர் முத்துசாமி வெயில் அதிகம் இருந்த காரணத்தால் பொதுமக்கள் உட்காருவதற்கு இருக்கையில் அமைக்கப்பட்டு சுற்றிலும் கீற்று வைத்து மறைத்தோம் என்றார்.

மேலும் அமைச்சர்கள் யாரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை என்றும் அமைச்சர்களும் கட்சி நிர்வாகி என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேலை செய்தார்கள் என்றார். மதுபாட்டில்களை பெற்றுக்கொண்டு 10ரூபாய் தருவதில் முரண்பாடு உள்ளதாக நீதிமன்றம் சொன்னது குறித்து கேள்விக்கு தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை சில இடத்தில் தான் திரும்ப பெறப்பட்டது ,

அந்த இடத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் திரும்ப வழங்காத இடத்தில் புகார் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , டெட்ரா பேக் திட்டமும் சோதனை அடிப்படையில் ஒரு சில இடத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். டாஸ்மர்க் ஊழியர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.டாஸ்மர்க் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குவது தொடர்பாக பரிசீலினையில் உள்ளது என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்

Tags:    

Similar News