மதுரவாயல் மேம்பாலத்தை கட்ட விடாமல் கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா

இந்தியாவிலேயே மிக நீளமான 21 கிலோ மீட்டர் நீளமுடைய மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலத்தை கட்ட கலைஞர் கருணாநிதி அவரது ஆட்சியில் பெரும் முயற்சி செய்து அடிக்கல் நாட்டிய நிலையில் அதனை கட்ட விடாமல் பல்வேறு காரணங்களை காட்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து கிடப்பில் போட்டு திமுக ஆட்சியும் , கலைஞர் கருணாநிதியும் பெயர் வாங்க விடாமல் செய்தார் என எம்.எல்.ஏ கணபதி பேசினார்.

Update: 2024-02-19 03:38 GMT

எம்.எல்.ஏ கணபதி

சென்னை அருகே நெற்குன்றம் 148 ஆவது வார்டில் வட்ட இளைஞரணி சார்பில் அண்மையில் சேலத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க தெருமுனை கூட்டமானது திமுக 148 வது வார்டு வட்ட இளைஞரணி தியாகராஜன் தலைமையில் வட்ட செயலாளர் ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பக்கம் கணபதி,விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர்ராஜா கலந்து கொண்டார்.

மேலும் இதில் இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவினர் என பலர் கலந்து கொண்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் இளைஞரணி மாநாடு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள, திமுக தலைமை கழக பேச்சாளர், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளான புடவைகள் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த கூட்டத்தில் மேடையில் பேசிய எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி கூறுகையில் : இந்தியாவிலேயே மிக நீளமான 21 கிலோ மீட்டர் நீளமுடைய மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலத்தை கட்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பெரும் முயற்சி செய்து அடிக்கல் நாட்டிய நிலையில் அதனை கட்ட விடாமல் பல்வேறு காரணங்களை காட்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து கிடப்பில் போட்டு திமுக ஆட்சியும் , கலைஞர் கருணாநிதியும் பெயர் வாங்க விடாமல் செய்தவர் எனவும் ஆனால் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்த உடன் அதே மேம்பால பணிகள் தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து திமுகவிற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News