இத்தாலி இன்ஜினியர் சுருண்டு விழுந்து சாவு

திருப்பூரில் இத்தாலியைச் சேர்ந்த பெஸ்டா ஜியோன் பிரான்கோ மாரடைப்பால் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

Update: 2024-06-14 17:09 GMT

இத்தாலி இன்ஜினியர் சுருண்டு விழுந்து சாவு

 திருப்பூர்-மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்திற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய எந்திரம் ஒன்றை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த எந்திரம் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்திற்கு வந்தடைந்தது.

அந்த எந்திரத்தை பொருத்தி தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக இத்தாலியிலிருந்து என்ஜினியர் பெஸ்டா ஜியான் பிரான்கோ (வயது58) என்பவரும் திருப்பூருக்கு வந்தார். திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்து எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்த பெஸ்டா ஜியான் பிரான்கோ சம்பவத்தன்று பணி முடிந்தவுடன் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடிரென மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். இதைக் கண்ட கார் டிரைவர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பெஸ்டா ஜியான் பிரான்கோ மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இத்தாலியில் இருந்து பணி காரணமாக திருப்பூர் வந்த நபர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

Similar News