சேலத்தில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டி

சேலத்தில் நடைபெற்ற ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான மாநில விளையாட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2024-03-13 09:38 GMT

சேலத்தில் நடைபெற்ற ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான மாநில விளையாட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து குழு விளையாட்டு போட்டி பிரிவில் 800 மீட்டர் ஓட்டம், கைப்பந்து, பேட்மிண்டன், கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சேலம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் இருந்து 650-க்கும் மேற்பட்ட ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ேநற்று 2-வது நாளாக நடைபெற்ற போட்டியில், 100, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று விளையாடினர்.
Tags:    

Similar News