ஜெ.பிறந்தநாள் - 760 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
செஞ்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் எம்.பி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
Update: 2024-02-27 05:30 GMT
நலத்திட்ட உதவி வழங்கல்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி-திருவண்ணா மலை சாலையில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் வி.ரங்கநாதன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவர் பிரஸ்குமரன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.ஆர்.பிரித்திவிராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு 760 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் கு.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, விநாயக மூர்த்தி, சோழன், நகர செயலாளர்கள் வெங்கடேசன், அனந்தபுரம் சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி நகர இளைஞரணி செயலாளர் வேலு நன்றி கூறினார்.