ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-01-31 08:12 GMT
பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரா செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து ஒரு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.