ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

10 அம்ச கோரிக்கைகளை நிறைவற்ற கோரி ஈரோடு தாலுக்கா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-31 07:50 GMT
தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றக்கோரி ஈரோடு தாலுக்கா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். தன் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News