பாலியல் தொந்தரவு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
திருப்புவனம் அருகே ஓடும் பேருந்தில் சிறுமியின் துப்பட்டாவை இழுத்து பாலியல் தொந்த்தரவளித்த வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார்.;
மூனீஸ்வரன், விஜய்
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி திருப்புவனத்திலிருந்து தேளி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த 16 வது சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி பாலியல் தொந்தரவு அளித்ததாக தேளி கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன், விஜய் மற்றும் சிறுவன் ஆகியோர் மீது பூவந்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் மூனீஸ்வரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விஜய் ஆகியோர் மீதான குற்றம் நிறுபிக்கப்பட்ட நிலையில் முதல் குற்றவாளியான முனீஸ்வரனிற்கு 5 ஆண்டு சிறை ரூ6 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த விஜய்க்கு 3 ஆண்டு சிறை 4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தண்டனை பெற்ற இருவரும் வழங்கும் அபராத தொகையுடன் அரசு தரப்பில் ரூ1 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.