சில்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் அருகேயுள்ள சில்லக்குடி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிப்ரவரி- 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இதில் பெரம்பலூர் மட்டுமன்றி அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, கடலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகளும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம் மற்றும் சில்வர் பிளாஸ்டிக் பொருட்கள் என பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை பெரம்பலூர் மட்டுமின்றி அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிர கணக்கிலான பொதுமக்கள் கண்டு களித்தனர்.