கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி: கிராம மக்கள் கோரிக்கை

கூலமேட்டில்bஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-01-12 11:05 GMT
கோப்பு படம் 

 சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கூலமேடு கிராமத்தில்பொங்கல் பண்டிகையை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண் டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகநடத்தப்பட்டு வந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழா குழுவினர் இதுவரை ஏற்பாடு செய்யாம லும் அதற்கு உரிய அனுமதி கோராமலும் உள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, கூலமேடு கிராமம் என்றாலே ஜல்லிக்கட்டுக்கு சேலம் மாவட்டத்தில் பெயர் போன கிராமம். ஆனால் இந்த ஆண்டு இது வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்ததேதி குறிப்பிடாமலும், விழா ஏற்பாடு செய்யாமலும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தேதி குறித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யலாம் என கிராமமக்களில் ஒரு தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

காணும் பொங்கல் அன்று ஜல்லிக் கட்டு போட்டி நடத்தாததால் கூலமேடு கிராம மக்கள், இளைஞர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News