தர்மபுரியில் கோலாகலமாக துவங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

தருமபுரியில் வீரத்தமிழன் பேரவை சார்பாக இன்று நடந்த 4 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-04 06:01 GMT

தருமபுரி மாவட்டம் அடுத்த சோகத்தூர் அருகேயுள்ள ஏ.ரெட்டிஅள்ளியில் வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 4ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டு போட்டியில் களம் காண்கின்றனர். இப்போடியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். வாடிவாசல் வழியே சீரிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கி வருகின்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள், குக்கர், சில்வர் அண்டா பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இளைஞர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவையொட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை சிகிச்சை வழங்குவதற்கு அவசர ஊர்திகள் மருத்துவத் துறையினர் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட கழக செயலாளர் தடகம் சுப்பிரமணி பழனியப்பன் ஆகியோர் மாடு போடும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News