விராலிமலையில் 30ம் தேதி ஜல்லிக்கட்டு!
விராலிமலையில் 30ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி.;
Update: 2024-04-27 05:11 GMT
ஜல்லிக்கட்டு
விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். ஆனால், லோக்சபா தேர்தல் நடந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. பூச்சொரிதல் விழா கடந்த 23ம் தேதி நடந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 30ம் தேதி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து வாடிவாசல் அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.