பொன்னமராவதியில் ஜமாபந்தி 92 கோரிக்கை மனுக்கள் அளிப்பு
பொன்னமராவதியில் ஜமாபந்தி 92 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின் இரண்டாம் நாளில் அரசமலை சரகத்துக்குள்பட்ட கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) ரம்யாதேவி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. இதில், காரையூர் உள்வட்ட கணக்குகள் தணிக் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அரசமலை சரகத்துக்குள்பட்ட வாழைக்குறிச்சி, நல்லூர், சுந்தரசோழபுரம்,
மேலமேலநிலை, அரசமலை, நெறிஞ்சிக்குடி, செவலூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களின் உள்வட்ட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும், பொதுமக்களிடமிருந்து 92 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன்,
பொன்னமராவதி வட்டாட்சியர் 2. சாந்தா, துணை வட்டாட்சியர்கள் சேகர், திலகவதி, ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து