குன்னம் வட்டத்தில் ஜமாபந்தி

குன்னம் வட்டத்தில் ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

Update: 2024-06-22 14:29 GMT

குன்னம் வட்டத்தில் ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது –குன்னம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது. குன்னம் வட்டத்திற்கான வருவாயத்தீர்வாயம் நிகழ்வு மாவட்ட ஆட்சியா கற்பகம், தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நன்னை பெருமத்தூர் சிறுமத்தூர், கீழப்புலியூர் எழுமூர் மற்றும் மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாரதிவளவன், வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு தலைமையிலும் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கோகுல் தலைமையிலும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரராமன் தலைமையிலும் நடைபெற்றது இன்று நடந்த ஜமாபந்தி , குன்னம் வட்டத்தில் 118 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 161 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 38 மனுக்களும், பெரம்பலூர் வட்டத்தில் 220 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News