கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி
கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் வருவாய் கிராமங்களுக்கான 1433 ஆம் ஆண்டு பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 18,20 மற்றும் 21 -ம் தேதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள், நில உடமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகிறது.
அந்தந்த கிராமங்களில் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள், பதிவேடுகளில் உள்ளனவா? என்பதையும்,பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நிலம் தொடர்பான புகார்களை,மனுக்கள் ஆக அளித்து தீர்வு காண்பதற்காக அதிகாரிகளிடம் அளித்தனர்.