மல்லிகை பூ ரூ.4500க்கு விற்பனை

வரத்து குறைந்துள்ளதால் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை 4500 ரூபாய்க்கும் முல்லை 1800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2024-01-20 08:49 GMT

மல்லிகை பூ ரூ.4500 க்கு விற்பனை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.,உசிலம்பட்டியில் பகுதியில் நிலவும் பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. மேலும் வார இறுதி சனிக்கிழமையான உசிலம்பட்டி பூ சந்தையில் பூக்கள் அனைத்தும் கேரளாவிற்கு திருவிழாவிற்கு அனுப்பபடுவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை 4500; ரூபாய்க்கும், முல்லை 1800 ரூபாய்க்கும், பிச்சி 1200 ரூபாய்க்கும் மற்றும் கனகாம்பரம் 1500 ரூபாய்க்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

கடந்த வாரம் வரை சுமார் 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை விலை இருமடங்கு உயர்ந்து 4500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கடந்த வாரம் வரை 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்ட பிச்சி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை இன்று மூன்று மடங்கு உயர்ந்து 1200 முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில் வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது., தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ3 ஆயிரத்தை தாண்டாத பூக்களின் விலை தற்போது உயந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News