ஜவஹர்லால் நேரு நினைவு நாள் : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!
தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-05-28 04:04 GMT
ஜவஹர்லால் நேரு நினைவு தினம்
முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு நேருவின் திரு படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, அமைப்புசாரா தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாச்சலம், சின்னக்காளை, மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பர்ணாந்து, மாவட்டச் செயலாளர்கள் சேவியர் மிஷியர், நாராயணசாமி, கதிர்வேல், ஜெயராஜ், குமார முருகேசன், ரெனிஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்