ஜெயக்குமார் மரணம்: கே.எஸ் அழகிரி பரபரப்பு தகவல்
ஜெயக்குமாரை கூலிப்படையினர் தான் கொலை செய்திருப்பார் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 11:33 GMT
கே. எஸ் அழகிரி
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நெல்லையில் இன்று (மே 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் கூலிப்படையினரால் தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருப்பார் என பரபரப்பாக தெரிவித்தார்.