ஜெயலலிதா வின் நினைவு நாள் - அதிமுகவினர் அஞ்சலி

அதிமுகவினர் பலர் அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-06 01:50 GMT

மறைந்த முதல்வர் ஜெ நினைவு தினம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதன் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் ஏற்பாட்டில், துவாக்குடி டாஸ்மாக் மண்டல குடோன் முன்பு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து டாஸ்மார்க் சுமை பணி தொழிலாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதேபோல் துவாக்குடி அண்ணா வளைவில் நகராட்சி வார்டு கவுன்சிலர் சாருமதி மற்றும் ஐடிவிங் நிர்வாகி மலைச்சாமி ஏற்பாட்டில், அங்கு ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் ராவணன், எஸ் கே டி கார்த்தி, நகர செயலாளர் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News