ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனை கூட்டம்
சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுநடந்த ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்துகொண்டார்.;
Update: 2024-02-11 08:01 GMT
ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அதற்கான ஆலோசனை கூட்டம் அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அம்மா பிறந்த நாளில் கட்சியின் அனைத்து பொருப்பாளர்களும், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்