ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக சார்பில் மௌன ஊர்வலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-12-05 09:43 GMT

அதிமுக சார்பில் மவுன ஊர்வலம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலையில் நேற்று கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் காமராஜர் சிலை முதல் கற்பக விநாயகர் கோயில், கள்ளக்கடை , அண்ணாமலையார் கோவில் , வழியாக காந்தி சிலை வரை மௌன ஊர்வலம் . முன்னதாக வாகனத்தில் முன்னாள் முதல்வர் அலங்கரிக்கபட்ட திருவுருவப் படத்தினை காமராஜர் சிலை முதல் முக்கிய வீதிகளின் வழியாக காந்தி சிலை வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.

காந்தி சிலை அருகே முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.இராமச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரங்கநாதன், கண்ணன், சுரேஷ்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் நகர செயலாளர் ஜெ.செல்வம் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ .எஸ். குணசேகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்திய வி.சிவகுமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் உஷாநாதன், மாவட்ட தலைவர் இளவழகன், துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் பெருமாள், கௌதம், வழக்கறிஞர்கள் திலக், மகாலிங்கம், சஞ்சீவி ராமன், மணிகண்டன், நகர மன்ற உறுப்பினர்கள் நரேஷ், சந்திர பிரகாஷ், சிவில் சீனிவாசன், சாந்தி சரவணன் என 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News