குமாரப்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: தி.மு.க.வினர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைத்து விட்டனர். தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் மாணவ மாணவிகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக சுமார் 56 லட்சம் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், திருமணமாகாத இளம் பெண்களுக்கு, திருமண உதவித் தொகையாக அரைப்பவுன் தங்கம் மற்றும் பட்டதாரி மாணவிகளுக்கு 50 ஆயிரம்,
25 ஆயிரம் ரூபாய் வழங்கியதுடன், இதே திட்டத்தை ஒரு பவுன் தங்கமாக உயர்த்தி வழங்கினார். மூன்று லட்சம் இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 2016 செப். 21ல் தங்கம், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை 5 நபர்களுக்கு ஜெயலலிதா வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜெயலலிதாவை இறுதி ஊர்வலத்தில் தான் பார்த்தேன். . சட்டமன்ற கூட்டத்தொடரின் போது போராட்டம் நடத்தியதால் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு தருவதாக தெரிவித்தனர்.
அதையும் முழுமையாக தரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில்தான் மூன்று கோடியே 26 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுக்கடை குறைப்பு, மானிய விலையில் ஸ்கூட்டர், உள்ளிட்ட பல திட்டங்கள் ஜெயலலிதா நிறைவேற்றினார்.