ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச்சு.
தன்னை காப்பாற்றிக் கொள்ள 40 ம் வெற்றி பெற்று அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச்சு.
Update: 2024-02-25 15:38 GMT
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முனுசாமி கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன் பாசிசம் என்றால் ஒருவரே அதிகாரத்தை வைத்துக் கொள்வது தான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைகிறார் அவருடைய மகன் தற்பொழுது முதலமைச்சராகி இருக்கிறார், முதலமைச்சரின் மகன் அமைச்சராக இருக்கிறார். மேலும் அமைச்சரின் மகனும் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார் இதுதான் பாசிசம். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் தான் இந்தியாவில் சிறந்த மாநிலம் என்ற ஒரு விருதை வழங்கியது மத்திய அரசு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மத்திய பாஜக அரசு இந்தியாவில் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது இருப்பினும் தமிழ் நாட்டிற்கு விருதை வழங்கியது. என்னதான் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தாலும் டெல்லியில் அதிகாரம் இல்லை என்றால் முதலமைச்சர் வெறும் ஸ்டாம்ப் பேட் தான் இன்று தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார். திமுகவில் வாரிசு அரசியல் அதிகமாகிவிட்டது அனைத்து மாவட்டங்களிலும் தங்களுடைய வாரிசுகளை தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாரிசு அரசியல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது திமுகவினரோ பேசவே கூடாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறையும் பொழுது திமுகவின் தலைவராக ஏன் ஆற்காடு வீராசாமி துரைமுருகன் போன்றோர் தலைவர் பதவிக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் நாற்பது தொகுதிகளும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் ஏனென்றால் அவர் பல தவறுகளை செய்து விட்டார். அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள 40 வெற்றி பெற்று அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் 40லும் வெற்றி பெற வேண்டும் என்று தற்போது தெரிவித்து வருகிறார். என்று முனுசாமி பேசினார்.