சேலத்தில், நாளை ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சேலத்தில் நாளை ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 5 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

Update: 2024-02-24 01:35 GMT

பைல் படம்

சேலத்தில் நாளை ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 5 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலம் தாதகாப்பட்டி கேட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கொண்டலாம்பட்டி பகுதி-2 செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

அப்போது 5 ஆயிரத்து 176 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜூ, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எஸ்.சவுண்டப்பன், மாணவர் அணி செயலாளர் சக்திவேல், கலைப்பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சேசரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் மாலை 4 மணி அளவில் வெற்றி நமதே என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., சேலம் தெற்கு சட்டசபை தொகுதி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News