முதல் சர்வதேச சிலம்ப போட்டியில் ஜெயம் கலைக்கோட்டம் மாணவர்கள் சாதனை !
முதல் சர்வதேச சிலம்ப போட்டியில் ஜெயம் கலைக்கோட்டம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முதல் சர்வதேச சிலம்ப போட்டி மலேசியாவில் ஷில்லாங் நகரில் நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, கத்தார், குவைத், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளில் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், நடுவர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச சிலம்ப போட்டியை டாக்டர் கனிமொழி, என்.வி.என்.சோமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தியா சார்பில் சேலம் ஜெயம் கலைக்கோட்டத்தில் இருந்து 7 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு 8 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 16 முதல் 18 வயதுக்கான தனித்திறமை மான் கொம்பு நேரடி போட்டியில் விஷ்வித்தா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதேபோல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான தனித்திறமை தங்கம் நேரடி போட்டியில் விஜயசாந்தி தங்கம் பதக்கமும், 30 வயதுக்கான ஆண்கள் தனித்திறமை தங்கம் நேரடி போட்டியில் காளியப்பன் தங்கப்பதக்கமும், தனித்திறமை நடுக்கொம்பு போட்டியில் குமர மணிகண்டன் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
10 வயது முதல் 12 வயதுக்கான தனித்திறன் பிரிவில் மிதுன் ஆதித்யா வெள்ளி நேரடி போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார். 13 முதல் 15 வயதுக்கான பெண்கள் தனித்திறமை ஒற்றை வாள் போட்டியில் வர்ஷினி வெள்ளி பதக்கமும், 19 முதல் 21 வயதுக்கான ஆண்கள் பிரிவில் தினத்திறமை தங்கம் நேரடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் சேலம் ஜெயம் கலைக்கோட்ட இயக்குனர் நடராஜ் இந்தியாவின் சார்பில் தலைமை நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மேலும் எஸ்.ராஜா நடுவராகவும், தர்மபுரியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற காந்தி மேலாளராகவும் பணியாற்றினர்.