கடன் தொல்லையால் ஜேசிபி டிரைவர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரை பகுதியில் கடன் தொல்லையால் ஜேசிபி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ஜே.சி.பி. டிரைவர். முருகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.16 லட்சத்திற்கு புதிய ஜே.சி.பி. வண்டி வாங்கினார். இதையடுத்து அவர் தாதம்பட்டி பகுதியில் தங்கி அம்மாப்பேட்டையில் ஜே.சி.பி. மூலம் மண் அள்ளும் பணி செய்து வந்தார். தற்போது போதுமான வேவை இல்லாததால் வண்டிற்கான தவணை தொகையை கட்ட முடியவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.