பாலக்கோட்டில் மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் நகை திருட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை;
Update: 2024-03-27 11:08 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுபட்டாணியர் தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் இவருக்கு வயது 65 இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி பழனியம்மாள் உணவுக்கு பிறகு தூங்க சென்று உள்ளார். சம்பவத்தன்று அதிகாலை அவர் எழுந்து பார்த்தபோது பழைய இரும்புபெட்டியில் வைத்திருந்த இரட்டை பதக்க தங்க சங்கிலி 6 பவுன், தங்க சங்கிலி 1 பவுன் என மொத்தம் 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள், இரும்பு பெட்டியை திறந்து திருடி சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.