பூட்டிய வீட்டில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளை!
Update: 2023-12-06 10:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் சித்தகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (57). விராலிமலையில் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சண்முகம், அவரது மனைவி கீதாலட்சுமி இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். 100 நாள் வேலை முடிந்து மதியம் கீதாலட்சுமி வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப் பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.