ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகை கொள்ளை !
நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலிசார் விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 05:17 GMT
கொள்ளை
ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கடைக்குள் இருந்த பிரகாஷை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர். இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.