கூட்டுறவு வங்கியில் நகை முறைகேடு - நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ மனு

தரங்கம்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நகைகளை உரியவர்களிடம் தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-02-02 07:15 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கடன் சங்கம் உள்ளது. இங்கு 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 52 பேர் நகைஅடகு வைத்துள்ளனர். விவசாயிகள் நகைகளை திருப்பி கேட்போது நகைகளை தராமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து வங்கியில் அடகு வைத்த நகைகளை அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து விசாரணை செய்த கூட்டுடுறவு துறை, மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்ட கஞ்சாநகரம் தொடக்க வேளான்மை கடன் சங்க செயலாளர் பிரதீப் என்பரை சஸ்பென்ட் செய்தார்.

Advertisement

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 17 விவசாயிகள் தங்கள் நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகையை வங்கி தராததால் பல விவசாயிகளின் பிள்ளைகளுடைய திருமணம் தடைபட்டுள்ளதாகவும், நகையை மீட்டு தராவிட்டால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் மனு அளித்தனர். தங்களின் நகைகளை கொடுப்பதற்கு எந்த வித உத்தரவாதமும் அளிக்காமல் கூட்டுறவு அதிகாரிகள் விவசாயிகளை தவிக்க விடுவதாகவும், கஞ்சாநகரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் லஞ்சம் பெற்றுகொண்டு நடவடிக்கை எடுக்காமல் கூட்டுறவுதுறை அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News